நீல நயனத்திற்கு ஓர்கவிதை

நாவினால் நீலநய னத்திற்கு ஓர்கவிதை
பூவினால் புன்னகை மெல்லிதழ்க்கு ஓர்கவிதை
தூவினால் ரோஜா யிதழ்மகிழும் பாதத்தில்
பாவினால் பாடவோவெண் பா

நாவினால் நீலநய னத்திற்கு ஓர்கவிதை
பூவினால் புன்னகை மெல்லிதழ்க்கு - தூவலாம்
தூவினால் ரோஜா யிதழ்மகிழும் பாதத்தில்
பாவினால் பாடவோவெண் பா

-----ஒ வி இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

நாவினால் நீலநய னத்திற்கு ஓர்கவிதை பாடலாம்
பூவினால் புன்னகை மெல்லிதழ்க்கு ஓவியம் தீட்டலாம்
தூவினால் ரோஜா யிதழ்மகிழும் பாதத்தில் தூவினேன்
பாவினால் பாடவோ நான் மௌனவிழி ஓவியமே

----ஒரே எதுகை ஐஞ்சீர் நெடிலடி நான்குடன் கலித்துறை

நாவினால் நீலநய னத்திற்கு ஓர்கவிதை
பூவினால் புன்னகை மெல்லிதழ்க்கு ஓர்கவிதை
தூவினால் ரோஜா யிதழ்மகிழும் பாதத்தில்
பாவினால் பாடவோநான் மௌனவிழி ஓவியமே

----நான்கு சீர் நாலடிகள் ஒரே எதுகை இப்பொழுது வஞ்சிவிருத்தம்

நாவினால் நீலநயனத்திற்கு ஓர்கவிதை
பூவினால் புன்னகை மெல்லிதழ்க்கு
தூவினால் ரோஜாமகிழும் பாதத்தில்
தூவவோ நானும் மகிழ்ந்திட !
----முச்சீர் அடியால் அமைந்த வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-21, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே