கருவறை

உற்சாகமாய்
நீந்தி வந்த
வால்மீன் யெனை
கணக்கச்சிதமாய்
சிறைபிடித்தது
கூண்டுகள் தாங்கிய
பஞ்சுப்பொதி
சிறையொன்று ......

வேகமெடுத்து வந்த
மொட்டுவிரியா
முல்லைப்பூ வதற்கு
முன்னுரிமை தந்து
உடன் வந்தவர்களை
வெளியனுப்பி
எனை மட்டும் பவித்திரமென
பற்றிக்கொள்ள  .....

உயிர்கொண்டு வந்த
விட்டிலது
விளக்குச் சூட்டில்
உருகியது போல்
ஒன்றோடென்று இணைந்துருகி
சிறைவாசத் தண்டனையது
தொடங்க ......

பனிக்குட நதியில்
பிடிமானமின்றி
தத்தளித்த பரிசல்தனை 
கொடிக்கயிறு கொண்டு
நிலைநிறுத்த ......

காற்றில்லாமல் சுவாசம்
உணவில்லாமல் உருவம்
எந்திறமையென நான்சிரித்தேன்

எனக்காக இன்னொருவள்
சுவாசித்துண்பதை யறியாமல் .....

மொழியறியாதவன்
சிரிக்க யேது நகைச்சுவை ??

காரணம் செவியுற்ற அவள்
கால்கொலுசு ஒலிச்சுவை ....

கற்பனை இல்லாதவனுக்கு
யேது இந்த கவிச்சுவை ??

கனவவள் எனைப்பற்றி
கொண்டதால் பதிவான புதுச்சுவை .....

சுகமாய் படுத்தேயிருந்ததால்
உண்டான பணிச்சுமை .....

சரம்கட்டி சாற்ற பத்தாது
தமிழ் பல்அணிச்சுவை ......

இருட்டறைதனில்
இதமான சூட்டில்
தூயபொன்னதை
வார்த்தெடுக்கும் வார்உருதனை

வர்ணித்து வார்த்தெடுக்க
முடியாமல் தோற்றேன்
நிதம் ....!!!!!!

எழுதியவர் : என்.கே.ராஜ் (9-May-21, 9:18 pm)
சேர்த்தது : Raj NK
Tanglish : karuvarai
பார்வை : 346

மேலே