ஒருநாள் போதுமா

ஆசிரியப்பா


நாடு கண்டதாம் கசுதந் திரதினம்
போட்டி போட்டது குடியர சுதினம்
நேரு பிறந்தநாள் குழந்தைகள் தினமாம்
குடியர சின்தலை வர்சர் வபள்ளி
அவர்பிறந் தநாளில் ஆசிரி யர்தினம்
கோலா கலமே அன்றுயின் றில்லை
சிப்பாய் நினைவில் சிப்பாய் நாளாம்
தியாகிகள் மகிழவும் அவர்க்கோர் தினமாம்
மேதினம் மாஸ்கோ கண்டதிங் கெதற்கோ
கம்பன் வள்ளுவன் தினமும அருமை.
காந்தி நேரு தினம்சரி கொடிநாள்
வசூல்இன்றும் தொடரல் எதற்காம்
காதலர் தினமாம் வெட்கம் இல்லை
காதல் கொண்டா டுவரோ பலர்முன்
தழரின் மரபு களவொழுக் கம்சொல்
பிறந்த நாள்இறந் தநாளுடன் துக்கநாள்
எதிர்ப்பு நாளுடன் பள்ளிக் கடைசிநாள்
மணநாள் பொங்கல் தீபா வளிநாள்
இன்னும் எத்தனை நாளை கண்டு
கடைசியில் கண்டான் அன்னைக் கும்நாள்
மூடன் முந்நூர் நாளும் வயிற்றில்
யாரும் காணா வளர்த்தாள் அன்னையும்
எத்தனை உதைத்தாய்ர் அடிவயிற் கலங்க
அத்தான் பாரும் என்று சிரித்தே
அப்பா கையைத் வைத்து காட்டினள
பிறந்த பின்னும் பொத்தியே வளர்த்தாள்
ஈனனே யவள்நினைக் கொதுககுவை யோநாள்
அன்னையே முதல்தெய் வம்சொன் னாரே
நிமிடமும் மறக்கக் கூடாத் தாய்க்கு
நன்றி கெட்டவர் ஒதுக்கினர் ஓர்நாள்
இதையா கிலும்ஒதுக் கினானே
நீங்கள் சொல்வதென் காதில் விழுகிறதே



........

எழுதியவர் : பழனி ராஜன் (10-May-21, 9:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1124

மேலே