குப்பை மேடு
தெருக்கள் சுத்தமாவதால்
உயர்கிறது குப்பை மேடு
மட்கும் குப்பைகளும்
மட்காகுப்பைகளும்
மண்டிகிடக்கிறது
மனமும் குப்பைமேடே?
கசப்பான நினைவுகள்
மட்கா குப்பையாய்
மறக்க முடிவதில்லை
சில நினைவுகள்
மட்கும் குப்பையாய்
மறந்து விடும்
மட்கா குப்பை
பூமிக்கு கேடு
கசப்பான நினைவுகள்
இதயத்திற்கு கேடு
குப்பைகளை சேரவிடாதீர்கள்
அப்புறப்படுத்துங்கள்
இல்லத்திலும் இதயத்திலும்.......
ஜோதி மோகன்
புதூர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
