காதலன் உயர்நிலைக்கு உயிரைத் தருவேன்

நேரிசை வெண்பா

தலைவர் பிரிவென் பரிந்துரை பேரில்
நிலையுயர தூரமாய் சென்றார். -- அலைவர்
நிலையுயரு மாயின்யென் மேனி அவத்தை
அலைச்சல் பொறுத்திடுவேன் பார்

அவரின் நிலை உயரவே அவரை தூரம்செல்ல
அனுமதித்தேன். அந்த நல்ல காரியத்தால்
நான் கவலையால் பசளை நோயால் மெலிந்து
உருக்குலைந்து போகட்டும் பரவாயில்லை


குறள் 9/11.

எழுதியவர் : பழனி ராஜன் (15-May-21, 12:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே