காதல்

காத்துகிடக்கும் காதல்

ஆத்தோர அடுக்குமல்லி காத்தோடு காத்தாட
சேத்தோர தாமரையாய் சேருதடி என் நெனப்பு..
கண்ணாடி நெஞ்சி கல்லடி பட்டுடிச்சே..
கரையான் புத்துக்குள்ள கருநாகம் பூந்திடுச்சே..
நெற்றி பொட்டுக்குள்ள என்ன வச்சி தச்சிபுட்ட
தரிகெட்டு ஒடும் கட்டாத காள போல என் மனச ஆக்கிபுட்ட
அலயாத்தி போல அடிமனசு நகரலயே
அடியாத்தி இந்த உசுர அடியோடு நான் மறந்தேன்..

எழுதியவர் : (15-May-21, 12:20 pm)
சேர்த்தது : jese ra
பார்வை : 165

மேலே