காதலரைக்காட்டி கொடுக்க மாட்டேன்
நேரிசை வெண்பா
காதலர் வாராமை தந்ததிந்த நோய்பசலை
காதலரை தூற்றாதீர் .மாற்றென -- பாதகமே
ஆயின் இயற்கைப் பசலைநோயா மென்றிடப்
போயினுயிர் போகட்டும் போ
எனதுகாதலர் என்னைப் பார்க்க வராததால் மனம்
பேதலித்து. உடல்வாடி சோகை நோயால் மெலிந்தேன்
உண்மை எனினும் என் காதலரைத் தூற்றாதீர் விட்டு
விடுங்கள். காதலர் பெயர் அடிபடாது என்னுடை நோய்
இயற்கையில் இ்வளுக்குவந்தது என்று சொல்வதில்
எனக்கு உடன்பாடாகும்
குறள் 10/11