என்னை உன் கூந்ததால் சிறை எடுக்காதே 555
***என்னை உன் கூந்ததால் சிறை எடுக்காதே 555 ***
என்னுயிரே...
உன் மீன் விழிகளால் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்...
எனக்குள்ளும்
புது கவிதை பிறக்கிறது...
உனக்கென்று
எழுதும் போதுதான்...
என் காகிதங்கள்
முழுமையாக நிரம்புகிறது...
மொட்டை மாடியில் நீ
சிக்கெடுக்கும் போதெல்லாம்...
நானும்
கடந்துதான் செல்கிறேன்...
தினம் உன் வீட்டு
வாசல் வழியே...
மேகத்தை
தூதாக அனுப்பினால்...
உன்
மேனி நனையும்...
தென்றலை
தூதாக அனுப்பினால்...
உன்
கூந்தல் கலைந்துவிடும்...
வாடை காற்றை
தூதாக அனுப்பினால்...
உன்
பொன்மேனி சிலிர்க்கும்...
என்னை பார்த்து
உன் உதடுகள் உருட்டிய...
ஒற்றை புன்னகையில்
நான் குளிர்ந்தேனடி...
மொட்டை மாடியில்
இனி சிக்கெடுக்காதே...
என்னை உன் கூந்ததால்
சிறை எடுக்காதே...
மழைமேக
என் கூந்தல் அழகியே.....
***முதல் பூ பெ.மணி.....***