நிலவு முகம் இவள் முகம்

சித்திரை மாதம் பௌர்ணமி இரவு
களங்கம் இல்லா நீல வானம்
முழு நிலவு ஏனோ இன்னும்
வானில் காணவில்லை ஆங்கு அந்த
தெளிந்து இருக்கும் தடாக நீரில்
மங்கை அவள் களங்க மிலாமுகம்
நிலவென பொலிந்த பிம்பமாய்க் கண்டேன்
ஆச்சரியம் என்னவெனில் தடாகத்தில் நிலவின்
வரவை நோக்கி இருந்த அல்லி மொட்டுக்கள்
நிலவென்று எண்ணினவோ மங்கை இவள்
முகம் கண்டு பூரிப்பில் பூத்து குலுங்கின
காத்திருந்த நிலவும் இப்போது வானில்
பவனி வந்தது சற்று ஏமாந்தது தனது
ஸ்பரிசம் ஏதும் இல்லாது இக்குமுதம்
மலர்ந்தது எப்படியோ என்று எண்ணி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-May-21, 6:43 pm)
பார்வை : 145

மேலே