போராட்டம்

ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு
சுடுகாட்டிலோ கூப்பாடு
இதற்கு யார் பொறுப்பு

நேற்றிருந்த உயிர்
இன்று மாயமாய் மறைகிறது
விதியின் விளையாட்டா இது
அல்லது யார் செய்த சதியோ இது

ஊரெங்கும் மரண ஓலம்
உயிர் மிஞ்சுவதோ
பெறும் போராட்டம்

யார் வந்து தீர்த்து வைப்பார்
முடிவிலா இத்துயரை

எதையும் எதிர்கொள்வோம்
துணிச்சலாக
துயரம் சூழ்ந்தாலும்
இதை வேன்று காட்டுவோம்
என்ற உறுதி மொழியுடன்

எழுதியவர் : (17-May-21, 11:48 am)
சேர்த்தது : Sridharan
Tanglish : porattam
பார்வை : 27

மேலே