உனக்கும் எனக்குமான இடைவெளி

ஒரு காதல் தோல்விக்கும்
கல்யாணத்துக்கும் இடையே
விடப்படும் இடைவெளி
ஆரோக்கியமான மணவாழ்வின்
அத்திவாரத்தை உருவாக்கும்
**
ஒரு குழந்தைக்கும்
இன்னொரு குழந்தைக்கும்
இடையே விடும் இடைவெளி
ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கும்.
**
ஒரு விவாகரத்துக்கும்
மறுமணத்துக்குமான இடைவெளி
அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டிய
நிதானத்தை உருவாக்கும்
**
ஒரு மரத்துக்கும்
இன்னொரு மரத்திற்கும்
இடையே விடும் இடைவெளி
ஆரோக்கியமான தோப்பை உருவாக்கும்
**
ஒரு மனிதனுக்கும்
இன்னொரு மனிதனுக்கும்
இடையே விடப்படும் இடைவெளி
ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-21, 4:19 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 143

மேலே