கடைக்கண் பார்வை

ராமரின் பாதம் பட்டு
கல்லாக இருந்த
"அகலிகை"
சாபவிமோசனம்
நீங்கி உயிர் பெற்று
பெண்ணாக மாறினாள்...!!

இது இராமாயணத்தில்
வரும் ஒரு நிகழ்வு...!"

அதுபோல்
என் வாழ்விலும்
ஓர் நிகழ்வு....!!

என் இனியவளின்
கனிவான கடைக்கண்
பார்வை பட்டு
உற்சாகம் இழந்த
என் உணர்வுகள்
எல்லாம்
சாபம் நீங்கியது போல்
புத்துயிர் பெற்றது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-May-21, 8:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadaikan parvai
பார்வை : 177

மேலே