பூத்துக் குலுங்குது கரையினில் பன்மலர் கொத்து

பூத்துக் குலுங்குது கரையினில் பன்மலர் கொத்து
பாத்துப் பாத்து ரசிக்குது உன்னகைப் பார்த்து
நேத்துநீ வந்தபோது ஆடிஆடிச் சென்ற அலைகள்
ஆத்தில் நீராட நீவரமல் வாடிநிக்கு தடிஇன்று !

-------இயல்பாய்
பூத்துக் குலுங்குது பன்மலர் பூங்கொத்து
பாத்து ரசிக்குது உன்னழகி னைப்பார்த்து -
நேத்தா டியஅலைகள் நீராட நீவரமல்
ஆத்தினில் வாடிநிக்கு(து) இன்று !

----வெண்பாவாய் இன்னிசையில்

பூத்துக் குலுங்குது பன்மலர் பூங்கொத்து
பாத்து ரசிக்குதுன் னைப்பார்த்து - பாத்தாயா
நேத்தா டியஅலைகள் நீராட நீவரமல்
ஆத்தினில் வாடிநிக்கு(து) இன்று !

-----வெண்பாவாய் நேரிசையில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே