அன்பு மழையே
அன்பே! ! உன் வரவிற்காக இத்தனை
நாளாக காத்திருந்தேன்
எங்கிருந்தோ இரைச்சலிட்டாய்
இடியாய் குரல்கொடுத்தாய்
என்னிடம் வாராமல்
உன்னை காணாமல் ஏங்கினேன்
இன்றோ என்னை காண வந்தாய்
என்னை நீ தீண்டும் போது
என் மேனி சிலிர்த்தது
என்னையே நான் மறந்தேன்
உன்னில் நான் நனைந்தேன்
மழையே! மீண்டும் வருவாயா?