சாளரத்தில் அவள் ஹம்மிங்
காலைச்சேவல் கூவியது கூரையில்
காலைக்குயில் கூவியது மரக்கிளையில்
காலையில் அவள்ஹம்மிங் சாளரத்தில்
காலையில் சிலிர்த்து எழுந்தேன்நான் !
காலைச்சே வல்கூரை யில்நின்று கூவிட
காலைக் குயில்பூ மரக்கிளையில் பாட்டிசைக்க
சேலை எழிலில வள்ஹம்மிங் சாளரத்தில்
காலையில் துள்ளியெழுந் தேன்
காலைச்சே வல்கூரை யில்நின்று கூவிட
காலைக் குயில்பாட் திசைத்திட - சோலைப்பூ
சேலை எழிலில வள்ஹம்மிங் சாளரத்தில்
காலையில் துள்ளியெழுந் தேன்
-----வ வி . ஒ வி இ வெ நே வெ