நிதானமிழந்த மனிதர்கள்

நிலையில்லா வாழ்வினிலே
நிதானமிழந்த மனிதர்கள்
நிலையில்லா செல்வத்தினால்
நிதானமிழந்த மனிதர்களாய்
நிமிட சுகமாம் காமத்தினால்
நித்திரையிழந்த மனிதர்களாய்
போதை தரும் மதுவினால்
பாதை தவறிய மனிதர்களாய்
கிளர்ச்சி தரும் புகை பழக்கத்தால்
தளர்ச்சி அடைந்த மனிதர்களாய்
ருசி தரும் துரித உணவினால்
பசி மறந்த மனிதர்களாய்
அரசியல் என்ற பெயரில்
ஆதாயம் தேடும் மனிதர்களாய்
நிலையில்லா வாழ்வில்
கொண்டு செல்ல எதுவுமில்லை
ஆனாலும் ஆசை விடவுமில்லை

எழுதியவர் : ஜோதிமோகன் (23-May-21, 11:54 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 62

மேலே