மரம் மரம்

திருடன் ஒருவன் காட்டு வழியே நடந்து சென்றான் .

இருடடுவதற்குள் காட்டை கடந்து விட வேண்டும் என்ற நிலையில் வேகமாக நடந்தான்.

சில நிமிடங்களில் இருள் சூழ தொடங்கியது.

விலங்குகள் அனைத்தும் தம்இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருந்தன.

திருடன் ஒருவித அச்சத்துடன் முன்னேறி சென்று கொண்டிருந்தான்

அவ்வழியே காலையில் இருந்து இரை கிடைக்காமல் பசியோடு திரிந்து கொண்டிருந்த புலி ஒன்று கடும் சீற்றத்துடன் உறுமியபடி உலா வர இதைக்கண்டு திருடன் திடுக்கிட்டான்

செய்வதறியாது திகைத்து நின்று பதுங்கினான்
ஆனால் புலி அதற்குள் அவனை பார்த்து விட்டது

அவனை துரத்த தொடங்கியது...
தப்பித்தால் போதும் என உடைமைகளை துறந்து உயிர்பயம் கொண்டு தலைதெறிக்க ஓடினான்

புலி இரைகிடைத்த நினைப்பில் அதிவேகமாக பாய்ந்து துரத்திச் சென்றது
ஒரு கட்டத்தில் ஓட முடியாத நிலையில் ஏதாவது உயரமான மரம் இருந்தால் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று திருடன் ஓடினான்

அருகில் மரம் எதுவும் தென்படவில்லை நிறைய புதர் மட்டுமே இருந்தது

ஆனால் திருடனுக்கு சிறிது ஞாபக மறதி உண்டு..அதனால் மரம் ஏற வேண்டும் என்பதற்காக மறக்காமல் இருக்க மரம்...மரம்...மரம்..
என முணுமுணுத்தப்படி ஓடினான்

ஒருவழியாக ஓர் உயரமான மரம் ஒன்று தெரியவே அதனை நோக்கி வேகமாக ஓடிச்சென்று ஏறி உச்சியில் கிளை ஒன்றில் அமர்ந்து பெருமூச்சு வாங்க கீழே பார்த்தான்

அங்கு கீழே இரை சாப்பிடாமல் பசிகளைப்பில் மேற்கொண்டு முயற்சி எதுவும் செய்யாமல் புலி படுத்து விட்டது

மேலே இருந்த திருடனுக்கு பயம் சற்று அதிகரித்தது நேரம் செல்லச்செல்ல புலி அப்படியே உறங்கி விட்டது

இருளில் புலியின் நிலை குறித்து தெரியாத நிலையில் மேலே திருடனுக்கு தூக்கும் வர ...எங்கே கீழே விழுந்து விடுவோமோ அல்லது புலி மேலே ஏறி வருமோ என்ற சந்தேகத்தில் திருடன் தூங்காமல் இருக்க யோசித்தான்

சரி .. இரவை எப்படியாவது தூங்காமல் கழிக்க இம்மரத்தில் உள்ள இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து போடுவோம் என பறித்து போட்டான்

பொழுது விடிந்தது...புலியை காணோம்...
கீழே புலி படுத்து உறங்கியதற்கு அருகில் கோபுர குவியலாக அம்மரத்தின் இலைகள் குவிந்திருந்தன

திருடன் கீழே இறங்கி சுற்றும்முற்றும் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓர் உயிரினம் கூட இல்லை.

சந்தேகம் வந்து இலைகளை நீக்கினான்
அங்கே ஓர் சிவலிங்கம் இருந்தது...வணங்கிவிட்டுச் சென்றான்

அன்று அவன்விழித்திருந்த இரவு சிவராத்திரி...
அவன் பறித்து போட்ட இலைகள் வில்வ இலைகள்...

அவை விழுந்த இடம் சிவலிங்கம் மீது...

அவன் ஓடிவரும்போது உச்சரித்த நாமம் ராம நாமம்...

ஆம் மரம் ... மரம்... என அவன் மரத்தை மறக்காமல் இருக்க ஓடிவரும்போது வேகமாக உச்சரித்து ராமா...ராமா... என்ற வார்த்தையை தான்..

அவன் அறியாமல் ராம நாமம் உச்சரித்து இருந்ததாலும்,
சிவராத்திரி அன்று கண்விழித்து வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்டதாலும்

அவன் திருடன் ஆக இருந்தும், திருட்டு தொழில் மேற்கொண்டாலும் புண்ணியம் கிடைக்கப் பெற்று இறுதி காலம் முடிந்த போது பிறவாநிலை எய்து இறைவனை அடைந்தான்.

அரியும்சிவனும் ஒன்று என்பதை உணர்த்தவும்...சிவராத்திரியின் சிறப்பை கூறவும்... ராம நாம வலிமையை உணர்த்தவும் ஆன்மீக பெரியோர்கள் சொல்லும் கதை...

எனது தாத்தா எனக்கு கூறியதை அப்படியே தந்துள்ளேன்.

எழுதியவர் : பாளை பாண்டி (24-May-21, 1:22 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : maram maram
பார்வை : 262

மேலே