தத்துவமே மருத்துவம்
தனக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரை பார்க்க சென்றார் ராமசுப்பு.
டாக்டர் ராமசுப்புவை பரிசோதனை செய்துவிட்டு ...உங்களுக்கு காய்ச்சல் மட்டும் 100 டிகிரி இருக்கு ...மற்றபடி பிரஷர், ஆக்சிஜன் லெவல் எல்லாம் நார்மலா தான் இருக்கு ...என்றார்
இரண்டு நாள் Dolo 650 சாப்பிடுங்கள் போதும்.. மேலும் டாக்டர் ராமசுப்புவை பார்த்து ..இப்போ கொரோனா பரவல் அதிகமா இருக்கு ..கொஞ்சம் கவனமா இருங்க ..முடிந்தவரை வெளியில் எங்கேயும் போக வேண்டாம் ,,தனிமையில் இருங்க என்றார்,
ராமசுப்பு ,,டாக்டரை பார்த்து லேசாக சிரித்துவிட்டு ..நான் கடந்த 15 வருசமா தனிமையில்தான் இருக்கேன் டாக்டர் ..
டாக்டர் ராமசுப்புவை ஆச்சரியமா பார்த்து ,,,அப்பிடின்னா ..என்றார்
அப்பிடின்னா அப்படித்தான் டாக்டர் ..
அப்போ ..உங்கள் குடும்பம் என்று டாக்டர் கேட்க ..
என் கதையை சொல்லி உங்கள் நேரத்தை நான் வீணடிக்க வேண்டாம் டாக்டர் என்றார் ராமசுப்பு .
இட்ஸ் ஓகே ..வெரி இன்டெரெஸ்ட்டிங் ..உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. என்னுடன் உங்கள் குடும்பத்தை பற்றி பேசலாம்
என்றார் டாக்டர் .. மேலும் நான் மன நலம் குறித்தும் படித்து இருக்கேன்.
ராமசுப்பு மெதுவாக தன் கதையை ஆரம்பித்தார் ..டெல்லியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி என்றும் , முப்பது வருடங்கள் கழித்து, சொந்த ஊரான கோவைக்கு வந்தேன் ..எனக்கு இரண்டு பையன்கள் ..ஒருவன் அமெரிக்கா...இன்னொருத்தன் கனடா ,,
மனைவி ..புண்ணியவதி ..பூவும் பொட்டுடன் புண்ணியம் தேடிக்கொண்டாள் ...
எனக்கு இந்த ஊரைவிட்டு செல்ல மனமில்லை என்று மிகவும் சுருக்கமாக தன் கதையை சொன்னார்..
டாக்டர் ராமசுப்புவை பார்த்து ..உண்மையிலே நீங்கள் மிகவும் தைரியசாலி சார் ..
இதுலே என்ன இருக்கு டாக்டர் ..
நான் சிறு வயதில் படித்தது ஞாபகம் வருது டாக்டர்
"பூமிக்கு தனியாக வந்தோம்
தனியாகத்தான் போக போகிறோம்
போகும் முன் எல்லோர் மனதிலும்
நம் நினைவுகளை விதைத்து செல்வோம்"
இந்த சிந்தனை வரிகளை என் மனம் அடிக்கடி நினைத்துக் கொள்ளும்
டாக்டர் ..மத்தபடி நான் ஒரு நாளும் இறப்பைப்பற்றி கவலை கொள்வதே இல்லை டாக்டர் ..
விதைத்தவனுக்கு தெரியாதா..என்னிக்கு அறுவடை செய்ய வேண்டுமென்று ...ராமசுப்பு பேசி முடித்தார் ..
டாக்டர் ராமசுப்புவை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார் ..மிகவும் சரியாக சொன்னீர்கள் ..
மருத்துவம் பார்க்க வந்த நீங்கள், உலக தத்துவத்தை
மன தத்துவம் படித்த எனக்கு உங்கள் அனுபவத்தால் புரிய வைத்து வீட்டீர்கள்..என்று டாக்டர் சொல்ல ..ஓகே டாக்டர் என்று சொல்லி விடைபெற்றார் ராமசுப்பு ..
--கோவை சுபா