பாரதியின் வருகை

டக் டக் டக்...
டக் டக் டக்...

வீட்டின் கதவைத் தட்டும் ஓசை கேட்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த அமிர்தா வேகமாக வெளியே வந்தாள். 'இந்நேரத்தில் யார் வந்திருக்காங்க?' என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தவளோ, வாசலில் வந்து நிற்கும் மீசைக்காரரைக் கண்டு வாயடைத்துப் போனாள்.

"நீ... நீங்க?" பேச வார்த்தை வராமல் திணறிக்கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகைத்தவர்,

"ஆமாம். நான் தான். நானே தான்... பாரதி வந்திருக்கிறேன்" என்று சொன்ன முண்டாசுக் கவிஞனை இன்னும் நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் அமிர்தா.

"நிஜமாவே நீங்க பாரதியா?"

"ஆம்"

"நீங்க எப்படி பாரதி இங்க வந்திங்க?"

"இன்று மகளிர் தினம். பூமியில் தங்களுக்கு மட்டும் இன்னும் எவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்று அறிந்தேன். அதனால் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கிறேன்"
என்று கம்பீரப் புன்னகையுடன் கூறியவரை இப்போது எரிச்சலுடன் நோக்கினாள் அமிர்தா.

எழுதியவர் : அனு விக்னேஷ்வரி (24-May-21, 3:38 pm)
சேர்த்தது : அனு
பார்வை : 158

மேலே