என் இதயத்தில் உன் நினைவு 555
***என் இதயத்தில் உன் நினைவு 555 ***
ப்ரியமானவளே...
ஓடும் ஆற்று நீரை போல
என் மனம் தெளிவாக இருந்தாலும்...
கரையோரத்தில் தேங்கி
இருக்கும் பாசிபோல...
என்னில் உன் நினைவு
இல்லாமல் இல்லை...
என்னை கண்டும்
காணாமல் செல்கிறாய்...
நான் உன்னை
காணும் போதெல்லாம்...
என்
இமைகள் நனைகிறது...
என் சோகத்தை சொல்ல
உன்னிடம் தோள் கேட்கவில்லை...
அவ்வப்போது
செவி கொடுத்தால் போதும்...
உன் பிரிவு
எனக்கு நரகம்தான்...
உன் நினைவு மட்டும்
எனக்கு சொர்க்கம்...
பாசி படிந்த
என் இதயத்தில்...
நீ பதித்து சென்ற
பாத சுவடுகள் அழகு...
வெளிச்சம் இருந்தும் இருளை
நோக்கியே என் பயணம்...
இன்னும் எத்தனை நாள்
நீளுமோ என் வாழ்வில்.....
***முதல் பூ பெ.மணி.....***