என்னை துரத்தும் உன் நினைவுகள் 555
****என்னை துரத்தும் உன் நினைவுகள் 555 ***
உயிரே...
நீ விலகிவிட்டாய்
என்னைவிட்டு...
நானும் விலகிவிட நினைத்தாலும்
உன் ஞாபகம் கூடவே வருகிறது...
பல மைல்கல் தூரம்
எளிதாக கடக்கிறேன்...
உன் நினைவுகளை கடந்து
செல்ல முடியவில்லை...
உயிர் எழுத்துக்களோடு இணையும்
மெய்எழுத்துக்கள் போல...
இணைந்துவிட
நினைத்தேன் உன்னுடன்...
நீயோ ஒற்றை
ஆயுத எழுத்து போல...
என்னைவிட்டு
விலகிடவே நினைக்கிறாய்...
உனக்காக
நான் வாழ்கிறேன்...
எனக்காக வாழ
என்னைத்தவிர யாரும் இல்லை...
மொட்டுக்குள்
இருக்கும் தேன்போல...
எனக்குள் என்றும்
நீ தித்திப்பாக இருப்பாய்...
உனக்குள் நான்
இல்லை என்றாலும்.....
***முதல் பூ பெ.மணி.....***