காவிரியாய் என் கண்களில் வெள்ளம் 555
***காவிரியாய் என் கண்களில் வெள்ளம் 555 ***
என்னுயிரே...
என் இமைகள் இமைக்கும்
நேரத்தில் கூட...
உன் நினைவுகள் ஈரமாய்
கசிந்துகொண்டுதான் இருக்கிறது...
தினம் இரவில் வரும் கனவுகளில்
உன் நினைவுகள் மட்டுமே...
விடை தெரியவில்லை
உன்னை வெறுக்க...
கைபேசியை
எடுக்கும் போதெல்லாம்...
சிரித்த முகத்துடன் நீ
என்னருகில் இருக்கும் புகைப்படம்...
பொங்கி வரும் காவிரியாய்
என் கண்களில் வெள்ளம்...
நிலையான நினைவிலும்
நிலையில்லா கனவிலும்...
உன்னை நினைத்து
என் மனம் தவிக்கிறது...
இருட்டான
என் இதய அறையில்...
துடிப்பாக இருப்பது
நீ மட்டும் தானடி.....
***முதல் பூ பெ.மணி.....***