356
26.5.2020
பிறப்பிடம் நோக்கி பலர்
புலம்பெயர்வு யாத்திரை
வழித் தடமாய் உதிரச் சுவடுகள்
புவிமேடை முழுதும் பிணவாடைகள்
உதிர்ந்து சரிகிறது உழைத்தவன் உயிர்
பரிகசித்துச் பேசுகிறது பதவித் திமிர்
செல் அரித்துச் சிதைகிறது தேச உத்திரம்...!
வல்லரசுக் கனவு இனி ஏடுகளில் மாத்திரம்