இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
இதயத்தில் ஒரு பாரம் எனோ உருவானது!
விழிகளில் உலவியவள்,
விடுகதை போட்டு சென்றவள்!
கண்ணார காதல் சொன்னவள்!
காற்றோடு கலந்து போனாள்!
காலங்கள் கரைந்தாலும்
கரையாமல் உன் நினைவுகள்!
மனசுக்குள் கட்டிவைத்தேன்
மஞ்சள் நிற தாஜ்மஹால்!
மாலை வேளையில் மகரந்தம் பூசி வந்த நிலவே
மனமேடை ஏன் வர மறுத்தாய்!
மருதானி வர்ணமாய் மறைந்து போனாய்!
தேய்பிறை நிலவாய் என்னை பிரிந்து சென்றாய்!
நீயற்ற வானில் தொலைந்து போனேன் கரும்புள்ளியாய்!