புனித கங்கை

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நேரிசை ஆசிரியப் பாக்கள்

புராண சகரன் வடக்கில் ஆண்டு
அஸ்வமே தயாகம் செய்தான் யாகக்
குதிரை யைப்பிடித் தவிரோ தியாரோ
வேண்டும் என்றே அதையும் கபில
முனிகள் ஆஸ்ரமத் தின்முன் வைத்தார்
சகரனின் மகன்கள் ஆஸ்ரம கபிலரை
தாக்கவும் முனிவர் சாபத் தாலவர்
எரிந்து சாம்பலா னாராம்
வாரிசு மன்னர் அனைவரும் சாம்பலாம்

அவருடை சடங்கு செய்யாப் போனார்
அவருள் திலீபன் மகன்பகீ ரதனும்
அறிந்தான் ஆகா யகங்கை கரைக்க
ஆகும் புனிதம் என்றே தெரிந்தார்
ஆதி நாரா யணர்திரு வடிபணி
துணையாள் வேண்டி பல்லாண் டுத்தவம்
மேற்றிட கங்கை பூமி புறப்பட
பிரளயங் கண்டதா காயம்
சிவனை வேண்டென பணித்தாள் கங்கையே


கடலாம் கங்கையால் அதிர்ந்த பகீரதன்
ஆதர வுகேட்டு சிவதவம் புரிந்தான்
நெடுநாள் பின்னே சிவனார் சடையை
விரித்து நிற்க கங்கையும் சடைபுக
புனிதமாம் நதியும் காணாப் போனது
சிவனிடம் உருகியே பகீரதன் வேண்டிட
சடையில் ஒன்றை சிவனார் நீக்க
பீரிய கங்கை பூமி வந்தாள்
பகீரதன் பின்னரும் தொடர்ந்தாள்
பலமைல் வந்த கங்கை காணோமே


தேடி ஓடியும் பலமைல் காணோம்
பின்னர் கண்டான் யேழது பிரிவாய்
சப்த ரிஷி தவஸ்தலம் சுற்றிஇருந்தாள்
பின்னும் கங்கையை வேண்ட வந்தாள்
முன்னே சென்றவள் பின்னே வடக்கே
பின்னோக் கியுத்திர வாகினி என்றே
போகத் துடித்தனள்பகீரதன் மீண்டும்
கங்கையை தவமாய் வேண்டி
காசியில் கொணர்ந்து கடலில் விட்டானே

ஆங்கே சகரன் முதல்தி லீபன்
வம்சமும் புனிதம் கொண்டு சிவபதம்
அடைந்தனர் பலவாண் டுக்கடக் கவுந்தான்
பகீரதன் தயவால் நாமும் அஸ்தியை
கரைத்தோம் கங்கை யிலேசொல்
ஏனோ இன்றக் கங்கைநா றுகிறதே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (29-May-21, 8:56 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 97

மேலே