வாழ்வினில் அன்பும் வளர்ந்திடுமே - கட்டளைக் கலித்துறை
பைந்தமிழ்ச் சோலை
காரிகைக்_களிப்பு: 02
(மா விளம் விளம் மா காய் வாய்பாடு)
அண்டம் கலங்கிட அன்பிலார் காட்டும் அடாச்செயல்கள்;
நண்ணும் வெறித்தன நால்வகை வேட்கை நலிந்திடினும்,
எண்ணம் தெளிந்திடின் இப்புவி வாழ்வும் இனித்திடுமே;
வண்ணம் அடைந்துநம் வாழ்வினில் அன்பும் வளர்ந்திடுமே!
– வ.க.கன்னியப்பன்
1, 3. 5 சீர்களில் மோனை
1 - 5 சீர்களுக்கிடையில் வெண்டளை பயில வேண்டும்.
ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச்சீர் விளங்காய் வர வேண்டும்.
ஈற்றடியில் விளங்காய் ஏகாரத்தில் முடிய வேண்டும்..