புதுமொழி

முடியும் ஏன்றே முயறச்சி எடு,
முடியாது என்றால் முட்டிமோதாது
முடிவை மாற்று.
விடியும் என்றே விரைந்து செயல்படு,
விடியாதது என்றல் விரைந்து விடைகொடு

தெரியும் என்றால் திடமாய் செயல்படு,
தெரியாது என்றால் தேர்ச்சி பெறு.
அறியும் என்றால் அறிஞ்ஞனாய் செயல்படு,
அறியாதென்றால் அறிவுடன் செயல்படு.
புரியும் என்றால் புலம்பாது இரு,
புரியாதென்றால் புரிந்து செயல்படு.

தடுப்பை துடுப்பாக்கு,
தடையை உடையாக்கு.
தவிப்பை வியப்பாக்கு;
தனிமையை இனிமையாக்கு;
தயக்கத்தை துணிவாக்கு;
கண்ணீரை வெந்நீராக்காதே;
கானல் நீரல்ல வாழ்க்கை,
கனவில் விடியாது வாழ்க்கை,
கவலையை குளம் ஆக்காதே
துக்கத்தை துருவி துருவி கேட்காதே
வெட்கத்தை விலாவாரியாக விசாரிக்காதே.

ஒட்டு கேட்பதைவிட வெட்டிக் கேள்,
லஞ்சம் வாங்குவதை விட பஞ்சத்தில் வாழ்,
ஊழல் செய்வதைவிட ஊரில் பிச்சை எடு.

விதைத்த நன்மை வீண்போகாது;
விளைத்த தீமை விதைத்தவனையே
சுடாமல் விடாது.

மயக்கத்தை மதிலாக்கு;
சலிப்பை களிப்பாக்கு,

தளராத உள்ளம் தடுமாறாது;
கிளறாத உள்ளம் கெடுதல் நினைக்காது;
உலரும் வாய் ஊர் போய் சேராது.

கஷ்டத்தை இஷ்டமாக்கு;
கவலையை கடுகாக்கு;
விதியை விதையாக்கு;
கதியை கலங்கரையாக்கு;
சதியை சாட்டையாக்கு.

உபதேசத்தைவிட உபயோகமாக பேசு
கோபத்தை கொட்டுவதைவிட,
பாசத்தை கொட்டி தீர்த்துவிடு

அலச்சியத்தை இலட்சியமாக்கு;
அவமானத்தை தன்மானமாக்கு;
ஆனவத்தை அடக்கி அன்பாக்கு;
இருமாப்பை இலகும் பனியாக்கு;
ஈயாக இருக்காதே,
ஈகையுடன் எறும்பாய் இரு.

எலிக்கு கோவணம் கட்டினாலும்,
எடுக்காது இருக்காது.

எட்டி நின்றாலும்,
ஏளனம் செய்து கொட்டிசிரிக்காதே

ஏழையாய் இருந்தாலும்,
கோழையாய் இருக்காதே.
மூடநம்பிக்கை என்னும் மூடியை திறந்துவிடு,
முடியாது என்பதை முடித்துவிடு,
பிடிவாதத்தை விட்டுவிடு,
பிழைஎன்று தெரிந்தவுடன் திருத்திவிடு,
உனக்குள் வாழ்,
ஊக்கம் உயர்வைத்தரும்,
உறக்கம் (நீண்ட) சோர்வைத்தரும்.
ஊமையாக இருக்காதே.

ஒவ்வொரு அடியிலும் எழுச்சி உண்டு;
ஓடாக உழைத்தாலும்,
ஓடியே உழைத்தாலும்,
ஒட்டுவதுதான் ஒட்டும்.

துக்கமும் துக்கம் தான்;
நீ தூங்கிக்கொண்டே இருந்தால்.

சிற்றுலிக்குத்தெரியாது தான் சிலைவடிப்பது.

எளியவர் என்று எவரையும் எடை போடாதே,
செத்தாலும் பஞ்சாங்கம் விடாது;
எலவுக்கு வந்து விட்டு எரிச்சல் மூட்டாதே,
தேன் ஒழுக பேசுபவவை விட,
தேள் கொட்டுவது போன்று
வெடுக்கென்று பேசுபவன் மேல்.

நாவை அடக்கு நல்லது நடக்கும்.
நித்தமும் கேட்டால்,
முத்தமும் கசக்கும்
கனிந்த முதிர்ந்த பழம்
காலடிக்குத்தான் வரும்.

கடன் வாங்கியவன்,
காலம் முழுவதும் செத்து செத்து பிழைப்பான்
பேய் அண்டினாலும்;
நோயை அண்டவிடாதே

அ. முத்துவேழப்பன் 

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (31-May-21, 3:02 pm)
Tanglish : puthumozhi
பார்வை : 56

மேலே