நம் உறவு கல்லூரிவரைதானா 555
***நம் உறவு கல்லூரிவரைதானா 555 ***
என்னுயிரே...
மூன்றாண்டுகள்
கல்லூரி காலம்...
நீயும் நானும் அதில் சேர்ந்து
கழித்த நாட்கள்தான் எத்தனை...
உள்ளத்தில் உட்புகுந்து
வரும் காற்றை போல...
ஒருவருக்கொருவர்
உள்ளத்தில் நிறைந்திருந்தோம்...
உன் மூச்சின் வெப்ப காற்று
என் குளிரை போக்கும்...
உன் விரல்கள்
என் விரல்களை கோர்த்து...
எத்தனைமுறை
சாலையை கடந்திருக்கும்...
விளையாட்டில் நான்
தோற்றாலும் வென்றாலும்...
எனக்கு தோல் கொடுத்து
தட்டி கொடுப்பாய்...
நான் வெல்லும் போதெல்லாம்
என் இரு கன்னங்களும் ஈரமாகும்...
பலமுறை
முயன்றுவிட்டேன்...
உன் நினைவுகளை
வெல்ல முடியவில்லை என்னால்...
தோல்விகள் மட்டுமே
ஒவ்வொருநாளும்...
நினைவுகளை எல்லாம்
கொடுத்து சென்றவள்...
உன் முகவரியை
கொடுக்காமல் சென்றது ஏனடி...
உன்னைத்தேடிவர துடிக்கிறேன் ஏனோ
உள்ளுக்குள் ஒரு தயக்கம்...
நம் உறவு
கல்லூரிவரைதானா...
இல்லை கட்டையில்
ஏறும்வரை தொடருமா...
காத்திருபேன்
அதுவரை நான் உனக்காக.....
***முதல் பூ பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
