இப்பிறவியின் புண்ணியமாம்

கிரீட கிரிமியின் வீரியத்தால்
உயிரை காக்கவே தனியார்
மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த
மானிடரின் நெஞ்சம் துடிக்கும்
நிலையிலேயும் பந்தத்தாரிடம்
பணத்தை உருவிட துடிக்கின்ற
சிறந்த மருத்துவ நிபுணர்களின்
செய்கைதான் உலகில் புனிதமாமே
உயிரற்ற உடலினை உள்வைத்தே
உண்மையை முற்றிலும் மறைத்தபடி
உரியவரிடம் பேரம் பேசிடும்
உத்தம மருத்துவர் வாழ்வதேனோ
சாவிலும் பணத்தை சம்பாதிக்கவே
சலைக்காமல் பாடுபடும் மருத்துமனைகளை
சாட்டைக் கொண்டு அடித்தால்தான்
சமமான மருத்துவம் கிடைத்திடும் பார்
இவ்வகை மருத்துவர்கள் பார்வையிலே
எவ்வகையிலும் படாமல் வாழ்வதுவே
இப்பிறவியின் புண்ணியமாம் உணர்வீரே!
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Jun-21, 7:10 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே