பணமின்றி உணவின்றி

ஊரடங்கு என்னும் பெரியக்குடையை
உயிர்காக்க விரித்த அரசாங்கம்
உயிர்பயம் அறியாத மனிதர்களால்
தாறுமாறாய் ஓடும் வாகனங்கள்
பதறாம் அனுப்பும் பெற்றவர்கள்
தடுக்காமல் பார்க்கும் காவலர்கள்
குறையாமல் சாவும் கிரீட நோயாளிகள்
பணமின்றி உணவின்றி இருப்பதாக
ஊடக கூட்டத்தின் கூப்பாடுகள்
நல்லவர் கள்ளர்கள் கொலையர்கள் சிலர்
இந்நாளில் செழிப்பாய்தான் இருக்கின்றர்
தொல்லைவரும் நாட்களை எண்ணாத
சோம்பேறிகள் பலர்தான் துடிக்கின்றர்
கிரீட நோய் விரைவாய் எங்கும்
பரவுதலுக்கு மூலமே மல மனித கூட்டங்கள்
கட்டுப்படாமல் சுற்றும் கூட்டத்தினை
திட்டமிட்டு ஓர் அறையில் திணித்து
கிரீட கிருமியை புகுத்தி தண்டித்தால்
பரவல் பற்றுவது விரைவில் அழியும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Jun-21, 7:32 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே