கொரோனா கால சந்தேகம்
" ஏன் இந்தக் குழப்பம் ?"
தொற்றோ தோன்றும் மூன்றாம்நாள்
...தொடரும் அதுவோ எட்டுவரை !
தொற்றில் பார்த்தே அறிந்தகுறை
... தோன்றும் அன்றோ இல்லைகுறை !
பற்றாய் நீயும் எட்டின்பின்
... பார்த்தே ஆய்ந்தும் தெரியாதாம் !
குற்றம் காணும் பலரின்று
... குறைகள் இதிலே காண்பதுமேன்?
( அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்)
(மா மா காய்
...மா மா காய்)
இப்போதுள்ள கொரோனா காலத்தில் ...பல கேள்விகள் நம்மை போட்டுக் குழப்பும்...
உதாரணமாக சில...
1. தொற்று என்று கண்டுபிடித்து முதலில் எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்...
5 நாட்கள் கழித்து...உங்களுக்கு
கொரோனா இல்லை என்று விட்டுவிட்டார்கள்.ஏன் எங்களைத் தவறாக மருத்துவம் பார்க்கிறார்கள்?
2. தொற்று என்று சொல்லிச் சேர்த்தார்கள்.
வைத்தியம் பலிக்கவில்லை. 10 ம் நாள் இறந்துவிட்டார். இறந்த அன்று..."தொற்று இவருக்கு இல்லை" என்று சான்றிதழ் தருகிறார்கள். ஆக...இத்தனை நாட்கள்...நோயே இல்லாதவருக்கு வைத்தியம் செய்திருப்பது என்ன நியாயம்?...
இப்படி ... புலம்புவதைக் காணலாம்... பத்திரிக்கையிலும் படிக்கலாம்...
காரணம் ...
அடிப்படை அறிவியல் தெரியாததே ....
மேலே சொன்ன
கழிநெடிலடியில் உள்ளது போல்....
கொரோனா கண்டால் ....
3ம் நாளிலிருந்து 8ம் நாள் வரை மட்டுமே .... RTPCR எனும்... நாசிச் சளி பரிசோதனை... கிருமியைக் காட்டும்.
அதற்கு முன்னரோ, பின்னரோ காட்டாது.
உதாரணத்தில் சொல்லப்பட்ட இரு நபர்களுக்கும்...கொரோனாத் தொற்று... மூன்றாம் நாள் பரிசோதனையில் தெரிந்திருக்கும்... 8ம் நாட்களுக்குப் பின்.... மறைந்திருக்கும். (காட்டாது).
இதுவே குழப்பத்திற்குக் காரணம்.
அறிவியல் அறிவோம்..."பா" ... வழியில்
மரு.ப. ஆதம் சேக் அலி.