பெண்ணின் பெருமை

ஒரு ஊரில் ஒரு ஏழை குடும்பத்தில் உள்ள பெற்றோருக்கு அழகான நான்கு குழந்தைகள் பிறந்தது. இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், அந்த ஏழை பெற்றோர் தினமும் வேலை செய்து அந்த பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள் அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் படிப்பு என்பது அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஆனாலும் நான்கு பேரும் ஒரு அளவு படித்தனர். நான்கு குழந்தைகளும் அளவுக்கு அதிகமான அன்புடனும் அக்கறையுடனும் ஒருவருக்கு மேல் ஒருவர் வைத்து வந்தனர். சில காலம் சென்ற பின் அக்காவிற்கு தாய்மாமனை திருமணம் செய்து வைக்க அந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அவளும் ஒப்பு கொண்ண்டால். திருமணம் அவர்களின் வசதிக்கு ஏற்றது போலவே நடந்தது. தாய்மாமனுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தால். தாய்மாமன் நர்குணம் மற்றும் தர்ம பிரபுவாக வாழ்ந்து வந்தார். சில காலம் கழித்து இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த உடன் தாய் இறந்து போனால். அரும்பாடு பட்டு சில மாதம் இந்த குழந்தைகளை தந்தை வளர்த்து வந்தார். இறந்து போன பெண்ணின் தங்கை இதெல்லாம் பார்த்து வந்தால். தன்னுடைய அக்காவின் பிள்ளைகள் படும் கஷ்டத்தை தினமும் பார்த்து மனதிற்குள் மன்றாடினாள். பிள்ளைகளின் நலன் கருதி தன் தாய்மாமன் உடன் திருமணம் செய்தால். அக்காவின் குழந்தைகளை தான் பெற்றது போல் நினைத்தது மட்டும் இல்லாமல் சிறுவயதில் தன்னுடைய அக்காவினுடன் பகிர்ந்தது, விளையாண்டது போலவே பிள்ளைகளை வளர்த்து வந்தால். ஓரு சில காலத்திற்க்கு பிறகு இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது. மொத்தம் நான்கு பேரையும் ஒன்றாக வளர்த்து வந்தால். குழந்தைகளும் ஒன்றாக வளர்ந்து படித்து, வேலைக்கு சென்று நான்கு சுவர்கள் போல் பெற்றோர்களை பாதுகாத்து கொண்டார்கள். இன்று வரை நான்கு பேரும் ஓர் தாய் பிள்ளைகள் என்று தான் தான் வாழ்ந்து வந்த அந்த கிராமம் போற்றுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது ஓரு பெண்
என்பவள் போற்றப்படுபவள் ஆவாள். இப்படி முடிக்கிறேன்
காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலகை விட பெரிது அன்பர்களே.

எழுதியவர் : Usha (6-Jun-21, 7:47 am)
சேர்த்தது : Usha
Tanglish : pennin perumai
பார்வை : 193

மேலே