வினாடியில் மறந்தது

விழித்திரை மூடியதும்
விலகியது மனத்திரை !
விரிந்த நெஞ்சிலும்
விசித்திர கற்பனைகள்
விந்தைமிகு வரிகளாக
வியக்குமளவு கவிதையாக !
விடிவெள்ளி நானல்ல
விதிவிலக்கும் எனக்கல்ல !
விடிந்து விட்ட காரணத்தால்
விடை பெற்றது உறக்கம் !
விருட்டென எழுந்தேன்
விரைந்து சென்றது !
வினாடியில் மறந்தது
விளைந்த சொற்களும் !
விழித்துப் பார்த்தேன்
விட்டத்தைக் காணவில்லை
விண்வெளியே தெரிந்தது !
பழனி குமார்
06.06.2021