விடலை பருவ காதல்
வெடித்த வெள்ளரியின் வெண்நெற்றியில்
சூரப்பழ அளவாட்டம் சுவையூட்டும் திலகம்
வாழைநார் நீளகேசம் தருமே புதுநேசம்
கருமைநிற பிறைபோல புருவமிரண்டும்
பனநுங்கினில் பதிந்த பால்நிலவின் நடுவில் சொருகிய நாவல்பழமாய் கண்கள்
தன்வாசனை தனையே துளையிடும்
முந்திரிபழமாய் மூக்கு
பலாச்சுளையை கிழித்தாற்போல் இதழ்கள்
சுளைமேல் தேன்ஊற்றிய அதன்வண்ணம்
உடைந்தமாதுளையாய் பற்கள் செதுக்கிய பப்பாளி பழமாய்உப்பிய கன்னங்கள்
கழுத்தில் பாக்குமரமாட்டம் படிக்கட்டுகள்
பருவமாங்கனிமீது பந்தலிட்டு அமர்ந்த சேலை எனும் சோலையில் சாலை ஏது
சரிபாதி நறுக்கிய ஆப்பிளின் அங்கமாய்
அற்புத படைப்பாய் கொடிஇடை சறுக்கிட
புடலைங்காய் போல நெளிவு சுளிவு காட்டிடும் கைகளில் வழியும் வனப்பிற்கு
வளையல் தான் வரம்பாக வாய்த்திருக்கு
அதில் நீண்டிருக்கும் நகங்களில் கொய்யாபழ வண்ணம்தான் தீட்டியிருக்கு
பிஞ்சு விரலிலே வெண்டை தோற்றிருக்கு
இடைக்குகீழே எக்குதப்பாய் எழுதிட வார்த்தைக்குதான் ஏதுவறுமை ஆயினும் இங்குவெறுமையே சிறப்பு ...பொறுப்பு
வாழைத்தண்டாய் உள்ள கால்கள் ஏனோ எனக்கு காலம் காட்டுவதேயில்லை
கோலம்போடும் அவள்கட்டைவிரலின் கால்அசைவின்போது ...
மொத்தத்தில்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்உள்ளம்
புகுந்த கன்னியே என்இல்லம்புகும் நாள்
தான் எப்போது...