பழி சொல்லும் உலகம் வழி சொல்லாது

பழி சொல்லும் உலகம் வழி சொல்லாது

பொருப்பற்ற கணவனின் போதையும்
பசி பிணியால் துடிக்கும் பிள்ளைக்களும்
பார்த்துக்கொண்டு சகிக்காத பெண்ணிவள்
பாதங்கள் தேடியலைந்தது தொழிலை

கற்ற கல்வி கைவிடவில்லை அவளை
கண்ணியமாய் தொழிலொன்று கிடைத்திடவே
இருக்கின்ற திறமைதனை காட்டி
ஈன்றுகொண்டால் நட்பெயரை அலுவலகத்தில்

கிடைத்தது உழைப்புக்கு பதவியர்வு
கூடவே வந்தது பொறாமையும் போட்டியும்
மேலதிகாரிக்கும் அவளுக்கும் நெருக்கமென
மோசமாக பேசினரே எல்லோரும்

தொழிலுக்கும் அவளுக்கும் தொடர்பில்லை
தோல் மினுக்கி பெற்றுக்கொண்டால் பதவியுயர்வு
இவளைப்போல ஈனப்பிறவி இருப்பதற்கு
இறந்து மடியலாம் இப்பூவுலகில்

ஈயத்தை காச்சூற்றிய வார்த்தைகளும்
இதயத்தை பிதுக்கியெடுத்து கொன்றதுவே
இழிவான கருத்துகளை காதில் வாங்கிக்கொண்டே
இகழ்ந்தவர்கள் முன்னெழுந்தாள் வாழ்ந்து காட்ட

எத்தனைதான் நாகரிகம் வளர்ந்தாலும்
எப்போதும் பெண்களுக்கு அவப்பெயர்தான்
தூற்றுவார் சொல்லுக்கு துவளாமல் எழுந்தாள்
துணிச்சலுடன் வாழ்ந்திட நல்லமுறையில்.

எழுதியவர் : ந.தாமரை செல்வி (7-Jun-21, 12:18 pm)
பார்வை : 89

மேலே