உன் வானவில் மேனியழகில்

கலைந்தால் முகில்கள்
பொழியாமல் போகலாம்
வான வில்லும் கலைந்து போகலாம்
கலைந்தாலும் உன் கருங்கூந்தல்
அழகைப் பொழியும்
நேற்று சூடிய மலரின்
மணம் கமழும்
உன் வானவில் மேனியழகில் !

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jun-21, 10:16 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 38

மேலே