கலிப்பா வெண்பா
வஞ்சித் துறை
கலியென்பாரு கலிப்பாவை
புலியென்பாரு நறுவெண்பா
மலிந்தார்பலர். புனைவதற்கே
சலிக்காதுநீ தினம்பழகே
கலி என்றால் சனி கலிப்பாவில் தளைத்
தொடுத்தல். சில சமயம் திக்கு முக்காடச்
செய்யும். எழுதியதை பாதியில் விட்டு.
வேறு தளை தொடுக்க முயற்சிப்பர்
அதேபோலத்தா்ன் புலவருக்கு
வெண்பாவும் புலியென்பர் பெரும்
புலவர் கள். காரணம் கலிப்பாவிலாவது
கூவிளம் கருவிளத்திற்கு பதில்
தேமாங்காய் தேமா போன்றவை மாற்றாகி
போட்டு ஒப்பேத்தலாம். வெண்பாவில்
அது முடியாது.
அதுவும் நேரிசை வெண்பாவில் இன்னும்
கடினம்.. எழுதி முடித்து ஒரு வாரங் கழித்து
கூட தவறுகளைக் கண்டு நான் திருத்திய
சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆகையினால்
எழுத எழுதத்தான் தளைகள் கைப்பழக்கம்
வரும்.