“எவ்வளவு கொடுப்பிங்க”
“எவ்வளவு கொடுப்பிங்க” ?
காலை சரியாக பத்து முப்பது . என்னோடு சேர்த்து இரண்டு கடைநிலை ஊழியர். ஒரு வயதான அம்மா நிறைய பைகளுடன் அமர்ந்திருக்க, அமைதியாக காணப்பட்டது அந்த வருவாய்த்துறை அலுவலகம் .
எந்த இடத்தில் கேள்வி கேட்கக்கூடி தலைமைப் பதவியில் இருக்கக்கூடியவர்கள் சரியாக இல்லையோ, அந்த இடத்தில்தான் பொறுப்புணர்வற்றவர்களாக , கடமை தவறியவர்களாக நடந்துகொள்கிறார்கள் கீழ்நிலை ஊழியர்கள் என்பது மறுக்கப் படமுடியாத உண்மை. “மனசாட்சி உள்ளவர்கள் நேர மேலாண்மையை மனநிம்மதிக்காக கடைபிடித்தாலும், பழுத்த பெருசாளிகள் வழி நடத்தும் விதம் புதியதாய் உள்ளே நுழையும் ஊழியனை “ மன உளச்சளுக்கு உட்படுத்துகிறது. இந்த வெளுத்த ஆடையுடன், சமூகத்தில் சட்ட பாதுகாப்போடு குற்றம் புரியும் அதிகார வர்க்கம்” என்று ,என் மனதிற்குள்ளே எனக்கு முன்னாள் நிகழும் சூழலை குறித்து புலம்பிக்கொண்டிருந்தபோது
காதோடு செல்போனில் கதைத்துக்கொண்டு, ஒரு இளைஞன் உள்ளே நுழைவது தெரிந்தது. அவர் இருப்பிடத்திற்கு வந்தும் , அந்த இளைஞர் பேச்சை நிறுத்தியதாய் தெரியவில்லை “நான் வணக்கம் சொல்லியும் கூட”அவர் பேசிக்கொண்டே கடிகாரத்தை பார்த்தார் .
நான் பார்த்த எல்லா அரசு அலுவலகங்களிலும் சுவற்றுக்கு பாரமாய் இருக்கும் கடிகாரங்கள் துள்ளியமாய் மணியைகாட்டும் . திருத்திவைத்த அதிகாரிக்கு பயந்து” இங்கு இவைகூட விதிவிலக்கு அல்ல என கையில் சொல்போனை எடுத்து அவர் முகம் பார்த்து “பாவம் சார் மக்கள் . இவ்வளவு ஃபைல் தேங்கிக்கிடந்தா” என்று ஒரே ஒரு சொல்லை மட்டும் உதிர்த்தேன்.
“முகம் மாரிவிட்டது அவருக்கு”
“வந்தா... உங்க வேலைய மட்டும் பாருங்க சார் ”என்று என் முகம் பார்த்து பேசாமல், புலம்பிக்கொண்டே ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிக்கொண்டேயிருந்தார் ”
“பேர் சொல்லுங்க சார் .
“எப்பகொடுத்தீங்க... யார்கிட்ட கொடுத்திங்க ... எதுக்காக...” என்று அடுக்கடுக்காய் கேள்விகேட்டவர் ,
என் விண்ணப்பத்தை எடுத்து துள்ளியமாய் துருவித்துருவி தப்பு கண்டுபிடிக்க ஆரம்பித்தார் .
“எங்கே அதிகாரியின் தவறு சுட்டிக்காட்டப்படுகிறதோ , அங்கே தான் அதிகாரியின் அதிகாரமும் தலைவிரித்து ஆடும் “ என்பது எல்லாறாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து தான்
“இது ஒன்னும் கத்தரிக்காய் இல்ல , நீங்க கேட்ட உடனே எடபோட்டு கொடுக்க .
சர்ட்டிபிகட். ஒவ்வொன்னா பாக்கனும் . எதாவது தப்புன்னா... கோர்ட்டுக்கு போவரது , என்னோட சேர்த்து என் மேல் அதிகாரியும்தான். நீங்க சரியா இருக்கலாம் ஆனா, தப்பா போர்ஜரி பன்றவங்க எத்தனைபேர் இருக்காங்க தெரியுமா ?... அதனால தான் சார் இவ்வளவு டைம் எடுத்துக்கிறோம். என்றவரின் கண்ணும் சொல்லும் சூடாக இருந்தது.
என்னை எப்படியாவது மடக்க வேண்டும் எனபதில் அவர் குறியாகவே இருந்தவரின் முதல் கேள்வி
“ நீங்கதான் மனுதாரருன்னு நான் எப்படி நம்பறது” என்றவர் என் மனுவில் அவர் வட்டமிட்டு வைத்திருந்த ஒவ்வொரு தப்பையும் சொல்லிக்காட்டி, நீயும் சரியில்லை என்னைப்போலவே” என்று காரணங்களை அடுக்கடுக்காய் எடுத்துக் கூறினார்...
என் முகம் பார்த்தார்.
என்ன புத்தகம் என்றார் ?
வாத்தியாரா?
என்ன சப்ஜட்?
நானும் ஆங்கிலம்தான் .
சின்ன மோதலில் தொடங்கி நல்ல நட்ப்பாய் முடிந்ததும் கூட , அவர் அதிகாரியாகவே நடந்துக் கொண்டார் .
“நான் கையெழுத்து போட்டு அனுப்பிடுவன் சார் ஆனா, என் மேல் அதிகாரிய புரிஞ்சுக்க முடியல... அவர் என்ன எதிர்பார்க்கிறாறுன்னு தெரியல........ எனக்கு எதுவும் நீங்க கொடுக்கவேணாம். ஆனா ,மேல் அதிகாரிக்கு எதாவது ” என்று தான் குற்றம் செய்ய மனமில்லாதவர் போல் காட்டிக்கொள்ளும் அந்த பாணி எனக்கு பிடித்திருந்தாலும் ,
அவர் தயக்கத்தை உணர்ந்து நான் முந்திக் கொண்டு “எவ்வளவு சார் ` என்று கேட்பதற்கு முன்பு “எவ்வளவு கொடுப்பிங்க? ` என்று கொஞ்சம் கூட அச்சமில்லாமல் அதிகாரத்துடன் பிச்சைக் கேட்பது போல் இருந்தது.