அம்மாடி உன் அழகு

அம்மாடி உன் அழகு
அள்ளமுடியாத சந்தனக்குழம்பு;
அம்மாடி உன் அழகு
அரச்சி ஊத்திய வெந்தயக் கொழம்பு.

அம்மாடி உன் அழகு,
அவிச்சி கிடக்கும் இட்டிலி தட்டு.

அம்மாடி உன் அழகு
முழிச்சி நிக்கும்,
மல்லிக மொட்டு.
அம்மாடி உன் உடம்பு,
வறுக்காத வஞ்சரத்துண்டு.

அம்மாடி ஓ முதுகு,
அந்திவாத்து தழும்பு.

உடுத்தாத உதடுரெண்டும்,
ஒறைய வச்ச பனித்துண்டு.

அம்மாடி ஓ பசப்பு,
உடுத்தாத பட்டுச்சீல

அம்மாடி உன் கிடப்பு,
அடப்பு இல்லாத வாய்க்கால் வரப்பு.


அம்மாடி உன் மனசு,
அறுத்துவிட்ட ஆல விழுது.

அய்யோடி உன் கண்ணுரெண்டும்,
வெட்டிப்போட்ட கரும்புத் துண்டு.

அம்மாடி உன் துடிப்பு,
வடிக்கப்போகும் கஞ்சிச் சோறு.

ஆத்தாடி உன் திமிரு,
கடிச்சிப் போட்ட எழும்புத் துண்டு.

வம்பாக நீயும்வந்து,
வாயடச்சு போக நின்னு,

வீம்பாக நீயும் நின்னு,
விரித்துப்போட்ட பாயப் போல,
அய்யோடி
நீயும் வந்து படுத்திரியே,
படுத்திவிட்ட பசியசுமந்து .

அம்மாடி உன் உறவு,
உருட்டி போட்ட
குண்டுக்கல்லு.

அய்யோடி உன் நடிப்பு,
துடுப்பு போட்ட ஓட்டிய படகு;
அம்மாடி உன் நடையும்,
ஒடிஞ்சி போகும் முருங்கக் கொம்பு.

அம்மாடி உன் பவுசு,
வச்சிருந்த வைரத்தோடு.

அம்மாடி உன் மனசு,
மணந்த மல்லிகை கொத்து.

அம்மாடி உன் வனப்பு,
வளர்ந்த வாழத்தண்டு.

ஆத்தாடி உன் வரவு,
விரித்துவிட்ட தென்னம்பூவு.

அம்மாடி உன் உசுரு,
ஒளிந்திருந்த பளிங்கிக் கண்ணு.

அய்யோடி உன் நெனப்பு,
பொசுக்கிப்போட்ட நெருப்பு,

அம்மாடி உன் உதடு
அறுத்துவிட்ட எலுமிச்சந்துண்டு

அம்மாடி உன் நினைப்பு,
நீண்டு சென்ற பயணக் களைப்பு.

அம்மாடி உன் அணைப்பு,
துடித்து விட்ட இதயத் துடிப்பு.

அய்யோடி உன் சிணுங்கல்,
சில்லரையைப் போட்ட சல சலப்பு.

அம்மாடி உன் தாகம்,
விக்க விட்ட தவிப்பு.

அம்மாடி உன் கனவு,
தங்கிப்போன கட்டில் மெத்தை.

அம்மாடி உன் கிடப்பு,
ஒட்டிய ஒட்டடக் கூடு.

அம்மாடி உன் கோபம்,
கிண்டி விட்ட தேன் கூடு.
அட
சீண்டி விட்ட சிறு குறும்பு.

அய்யோடி உன் சிரிப்பு.
பிடிச்சிவிட்ட பீங்கான் தட்டு.
அம்மாடி உன் பேச்சி,
உருட்டி விட்ட சோளிக் கொத்து.
அடடா உன் ஆட்டம்,
ஆடிய சாவிக்கொத்து.

அய்யோடி உன் கண்ணு,
பளிச்சின்னு உள்ள முல்லை மொட்டு.

பொசுக்குன்னு வந்து நின்னு,
பொசுக்கிப்போட்டு நீயும் நின்று,
பொல்லாததை சொல்லி நின்னு,

வீம்பாக வம்புச் சண்டையை இழுத்து ,
விடு விடுனு திரும்பி நின்னு,
கடு கடுனு வெடிச்சி நின்னு,
கட்டிக்கவில்லையின்னு,
துடிச்சு நின்னு,
வராத கோபத்தில
வறுத்தெடுத்து,
பிடி பிடின்னு பிடிச்சி நின்னு,
பிடிவாதம் எதுக்கு பொண்ணு.

அட அட
ஏன்டி உனக்கு இந்த ஊமக் குசும்பு,
உடம்புகுள்ளே என்ன தவிப்பு.
போதுமடி போதுமடி உன் விசும்பு,
பொல்லாத வெறும் குசும்பு.
வாடி நீயும் வந்துபுட்டு,
வந்த காத்த சுவாசிக்கிட்டு மல்லுக்கட்டு,
மல்லு வேட்டியிலே,
மனச பொதச்சி.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Jun-21, 8:14 pm)
Tanglish : ammadi un alagu
பார்வை : 205

மேலே