சீரகச்சம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீரகச்சம் பாஅரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் - வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

இனிமையான சீரகச் சம்பாவரிசியை உண்டால் சுவை பெருகும்; உண்டவுடனே பசியெடுக்கும்; சில நோய்களும் குணமாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-21, 10:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே