கோவைக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(‘ற்’ ‘த்’ வல்லின எதுகை)
வாயின் அரோசகம்போம் மாறா அழலையறும்
நோயிற் கபமகலும் நுண்ணிடையே - தூயவதன்
வற்றற் கருசி மருவுகரப் பான்போகுஞ்
சுத்தக்கோ வைக்காயைச் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
கோவைக்காய் சுவையின்மை, வெப்பம், சுரம், கபம் இவற்றை நீக்கும்; இதன் வற்றல் உணவில் வெறுப்பு, கரப்பான் இரண்டையும் நீக்கும்