அவள் கற்பாகவே....

*கவிதை ரசிகன்* _படைப்பு_

கண்மணியே !
உன் கால் கொலுசில்
நான் முத்தாக வாழ
விரும்பவில்லை
அது மூன்று மாதத்தில்
உதிர்ந்து விடலாம்
அல்லது
தொலைந்து விடலாம்.....!

உன் கூந்தலில்
மலராக வாழ
விரும்பவில்லை....
அது மாலைக்குள்
உதிர்ந்து போகலாம்
அல்லது
வாடிப் போகலாம்.....

உன் நெற்றியில்
நான் பொட்டாக வாழ
விரும்பவில்லை
அது ஒரு மணி நேரத்தில்
சிதைந்து போகலாம்
அல்லது
அழிந்து போகலாம்.....

உன் கரத்தில்
நான்
வளையலாக
வாழ விரும்பவில்லை...
அது ஒரு மாதத்தில்
உடைந்து போகலாம்
அல்லது
ஔியிழந்து போகலாம்....

உன் தலையணையாக
நான் வாழ
விரும்பவில்லை
அது
ஓர் இரண்டு வருடத்தில்
பழுதடைந்து போகலாம்
அல்லது
மாற்றப்படலாம் .....!

அதனால்....

உன்னை விட்டு
எப்போதும்
விலகாமல்
ஆயுள் முழுவதும்
உன்னோடு இருக்கும்
"உன் கற்பாவே " வாழ
நான் விரும்புகிறேன்....!!!

*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Jun-21, 8:34 pm)
பார்வை : 50

மேலே