வையகம் எழுந்தவிட்டது வம்பு வேண்டாம்

இரவும் இவர்களும்
இருளும் இருவரும்
உரைத்ததாம் இதயம்,
உந்தியதாம் ஏக்கம்,
உணர்த்தியதாம் உணர்வு,
உறைந்ததாம் இரவு ,
விதைத்ததாம் காதல்,
வதைத்ததாம் வயது,
வருத்தியதாம் பருவம்,
திகைத்ததாம் தேகம்,
சுவைத்ததாம் மோகம்,
பகைத்ததாம் பொழுதும்,
உதைக்கத்ததான் கால்கள்.

சிக்கிய சிக்கலாக,
சிக்கித்தான் போனார்கள்,
சிங்காரியும் சிங்காரனும்,
சரிப்பும் அடங்கியது,
தவிப்பும் அடங்கியது,
சிலையானது தேகம்,
சித்திரம் வடித்தது வானம்,
சிதறத்துவங்கியது விண்ணில் மீன்கள்,
மின்னித்தவித்த மேகம்
மூடத்துவங்க,
கரு முகிலின் ஆட்டம்,
கசக்கிய கசக்கில்,
கொட்டியது மேகம்,
மழைத்துழிகள்தான்,
உயிர்த்துயிகள்தான்,
மண்ணின்தாகமும் மறைந்தது,
மனிதனின் தாகமும் அடங்கியது.
போதும் போதும் படுத்துறங்கட்டும்
இரவும்,
பார்த்து ரசிக்கட்டும் நிலவும்,
சுவைத்தது போதும் கனியை,
சுண்ணாம்பு அடிக்கத் துவங்கிவிட்டான்
காலைப்பொழுதவனும்,
வருகை தர தவித்திட்டான் ஆதவன்,
வையகம் எழுந்தவிட்டது
வம்பு வேண்டாம்
இன்ப தாகம் இன்று இரவுக்கும் இவர்களுக்கும் எடுக்கட்டமே
சுமந்த தேகமும், வானமும்,
சோம்பல் மறிக்கட்டமே!

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Jun-21, 10:59 am)
பார்வை : 30

மேலே