மனிதநேயம்

மனிதநேயம்
அழகு கொஞ்சும் எழில் மிகு சென்னை எங்கு திரும்பினாலும் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றும் மக்கள். ஆண் பெண் இருவரும் வேலைக்கு இறக்கை கட்டி பறக்கும் காலை பொழுது. இயந்திரம் போல் இயங்கும் வாழ்க்கை அனைவருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சென்னையை சுற்றி பல அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏராளம் காணப்பட்டன. அவற்றில் மிகவும் வசதி உடைய மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வந்தனர்.

அனைவராலும் கவரப்பட்ட மிகவும் முக்கியமான இடம் சென்னையில் மேலும் மக்கள் மிகவும் அதிகம் வசிக்கும் இடம். அந்த பகுதியில் பல வண்ணத்தில் காட்சி தந்த ஒரு இயற்கை ஏழில் கொஞ்சும் பல அடுக்கு அடுக்குமாடி வீடு அதில் ஒரு வீட்டில் முத்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் நீண்ட நாள் அரசு உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஒரு மனைவி இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் இந்த அடுக்குமாடி வீட்டை தான் உத்தியோகத்தில் இருக்கும் பொழுதே தவணை முறையில் வாங்கினார். தனது இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்துவிட்டார். முத்து அடிப்படையாக பிற உயிர்கள் மீது பிரியம் உடையவர். தோட்டம் அமைப்பதில் ஆர்வம் உள்ளவர் அவர் தனது வீட்டில் ஆசையா பல பிராணிகளை வளர்த்தார். அவர் வளர்த்த பிராணிகள் நாய், பூனை, பறவைகள்,அவற்றை தான் விற்பதற்காக வளர்க்கவில்லை அவற்றின் மீது பாசத்தில் அக்கரையில் வளர்த்தார்.
அவர் பணி ஓய்வுக்கு பிறகு இவைகளில் தான் தன் முழு கவனத்தயும் செலுத்தினர். முத்துவுக்கு மனைவியும் மிகவும் உதவியாக இருந்தார். இருவரும் தங்கள் குழந்தைகளை போல் பிராணிகளை வளர்த்து வந்தார்கள். பற்றாக்குறைக்கு வீட்டின் மொட்டை மாடியில் இயற்கை வீட்டு தோட்டம் வளர்த்து வந்தார். முத்துவின் கவனம் மற்ற உயிர்கள் மீது அதிகம் இருந்தது. முத்துவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் அடிக்கடி வாடகைக்கு வந்து செல்வார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்தார். தற்பொழுது அந்த வீட்டிற்கு ஒரு வழக்கறிஞர் குடும்பம் குடிவந்தது. அந்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் வழக்கறிஞர்கள். அவர்கள் இருவரும் மிகவும் சுயநலம் மிக்கவர்கள். மிகவும் திமிரும் அதிகாரம் கொண்டவர்கள். பக்கத்து வீட்டில் குடி வந்த பிறகுதான் முத்துவிற்கு சங்கடங்கள் காத்திருந்தன. அவர்கள் வீட்டில் உள்ள பிராணிகள் மீது அவர்கள் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.

தினம் தொடர்ந்து குறைகள் சொல்லி கொண்டே இருந்தார்கள். ஆனால் முத்து அனைத்தையும் சகித்துக் கொண்டார். ஒருநாள் திடீரென்று முத்துவின் நாய் பக்கத்து வீட்டில் வாசலில் அசுத்தம் செய்து விட்டது. அதை பார்த்த வக்கீல் குடும்பம் முத்துவை பார்த்து சரமாரியாக வசைபாடியது. இறுதியாக வக்கீல் குடும்பம் முத்து மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு இருதரப்பிலும் வாதிடப்பட்டது. இறுதியாக நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்தார். மீண்டும் கோர்ட் கூடியது அன்று நீதிபதி தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார் திரு முத்து அவர்களே உங்களுக்கு உங்கள் பிராணிகள் மீது பாசம் இருக்கும் அதில் தப்பில்லை ஆனால் அரசு உத்தரவுப்படி வளர்ச்சியடைந்த நகரங்கள் மற்றவர்களுக்கு இடையூறாக பிராணிகளை வரக்கூடாது என்று சட்டம் உள்ளது. அப்படி கட்டாயம் நீங்கள் வளர்க்க வேண்டும் என்றால் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விளக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்கள் பிராணிகளை சரணாலயத்தில் ஒப்படையுங்கள் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அதை மனதில் உள்வாங்கிய முத்து ஒரு கணம் திகைத்து போய் கண்ணீர் சிந்தினார். பல கோணங்களில் மனதை அலசி யோசித்தார்.
தற்பொழுது முத்து வசிக்கும் வீடு பல ஆண்டுகளுக்கு முன் சிறுகச்சிறுக பணம் கட்டி வாங்கியது மிகவும் ராசியான வீடு. அதை விட்டு போக மனம் இடம் கொடுக்கவில்லை அதே சமயம் தங்கள் பிள்ளைகளை போல வளர்த்த பிராணிகளை தாவரங்களை வெளியில் கொடுக்கவும் மனசில்லை. பல வழிகளில் யோசித்த முத்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். தனக்கு வீடு முக்கியம் இல்லை செல்ல பிராணிகள் தான் முக்கியம் என்று முடிவெடுத்து தன் வீட்டை விற்க முடிவு செய்தார். வீடும் விற்றது அதன் பிறகு சென்னையின் அருகில் மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து வீடு வாங்கினார். அந்த வீட்டிற்கு தன் செல்ல பிராணிகளுடன் தாவரங்களையும் கொண்டு சென்று குடியேறினர். மிக சந்தோஷத்துடன் தன் மனைவியுடன் மனநிறைவோடு வாழ்ந்துவருகிறார். மனிதநேயம் மிக்க மனிதர்களும் உலகில் உள்ளார்கள் என்பதற்கு முத்து ஒரு சிறந்த சாட்சி.

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Jun-21, 11:02 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manithaneyam
பார்வை : 191

மேலே