அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா

கண் கண்ட முதல் ஹீரோ
அனைவருக்கும் அப்பா தான்

செல்லத்திற்கு பஞ்சம் இல்லை
அப்பாவிற்கு செல்லப் பிள்ளை

முறைத்துக் கூட பார்த்ததில்லை
குறை சொல்ல தோன்றவில்லை

குரலில் கடுமை இருந்ததில்லை
தனியே தவிக்க விட்டதில்லை

பிஞ்சுப் பாதம் நோகுமென்று
கால் தரையில் பட விட்டதில்லை

சில்மிசங்கள் செய்தால் கூட
எனை விட்டு கொடுத்ததில்லை

வேண்டியது வேண்டும் முன்னே
கை வந்து சேர்ந்துவிடும்

அன்பு கொண்டு அரவணைத்து
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை

நீங்கள் அருகில் இருக்கும் வரை
எனக்கு எந்த குறையுமில்லை

பட்டம் விட கற்றுக் கொடுத்து
பட்டப் படிப்பு படிக்க வைத்து

எனைச் சுமந்த தோள்மீது
என் பிள்ளையையும் சுமந்தீரே

நாட்கள் உருண்டு ஓடியதே
நன்றி உமக்கு உரைத்ததில்லை

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (19-Jun-21, 11:38 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : anbulla appa
பார்வை : 5267

மேலே