தந்தை ஒரு விந்தை உலக தந்தையர் தின சிறப்பு கட்டுரை

அப்பா என்றாலும், தந்தை என்றாலும், தகப்பன் என்றாலும், அது நம் அன்பு தெய்வத் தாயின் துணைவர்தான்!
நம்மைப் பெற்றெடுக்க வேண்டும் என்றால் நம் அம்மாவுக்கு, அப்பாவின் அருள் தேவை!
எனவே, நமக்கு ஒரு தாய் அமைய முதற் காரணமாக இருப்பதே தந்தைதான்!
நம்மை பல மாதங்கள் கருவில் சுமந்து நம்மை பாதுகாப்பவள் நம் அம்மா!
பிறந்தவுடன் நம்மைக் கண்டு சொர்கத்தை பெற்றது போல் மகிழ்ச்சி அடைபவள் அவள்!
அம்மா, நம்மை பாலுட்டி. தாலாட்டி, சீராட்டி, பாராட்டி கொண்டாட, அப்பா மிக அவசியம்!

பல இடங்களில் அம்மாவுக்கு, அப்பா கொடுத்தால்தான் பணம்! பணம் இன்றி அன்பு அம்மா என்ன செய்வாள்? தாய்ப்பாலுக்குக் கூட அவள் திடமான ஆகாரம் எடுத்தால்தானே! பணம் இன்றி அந்த ஆகாரம் கிடைக்குமா? கிடைக்காதே!
அம்மா, அப்பா இருவரும் பொருள் ஈட்டினாலும், அப்பா என்கிற இடம் மிகவும் உயர்ந்த ஒன்று! அம்மா ஒரு நாளில் நூறு முறை கொஞ்சுவது, அப்பா ஒரு முறை குழந்தையுடன் கொஞ்சுவதற்க்கு இணை!

வெளி உலகம் என்ன, என்பதை குழந்தைக்கு முதலில் உணர்த்துபவரும் தந்தைதான்!
அம்மா அன்பை அளவின்றி கொடுப்பாள்; அப்பா ஒழுக்கத்தையும், கடமைகளையும், அன்புடனும், கண்டிப்புடனும் கற்றுத் தருவார்!
அப்பா என்றால் பொதுவாக ஒரு பயம் இருந்த காலம் மாறி, இப்போதைய குழந்தைகள், இருவரிடமும் கலகலவென்று பழகிவருவதையும் நாம் காண முடிகிறது!

தந்தையின் கண்டிப்பில், மேற்பார்வையில் ஒரு குழந்தை சிறந்த முறையில் ஒழுக்கம் கலந்த கல்வி மற்றும் கலைகளை கற்கிறது!
பிள்ளை உடம்புக்கு ஏதாவது என்றால், அலுவவகத்திலிருந்தாலும் உடனடியாக விரைந்து வந்து நம்மை கவனிக்கும் கடமை அப்பாவின் வியக்கத் தகுந்த செயலாகும்!
அம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்து, அவள் மனநிலையை, உடல்நிலையைப் புரிந்து கொண்டு, குடும்பத்தை உரிய வழியில் நடத்திச் செல்பவர்,அப்பா, என்றால் மிகையாகாது!
முக்கிய சில கால கட்டங்களில் தகுந்த அறிவுரை அளித்து நம் உண்மையான முன்னேற்றத்திற்காக எப்போதும் எண்ணும், செயல்படும், அருமையான மனிதர் தந்தை!
சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், அம்மா ஒரு கண் என்றால், அப்பா, இன்னொன்று!

தாயின்றி நாமில்லை!
தந்தையின்றி நாம் இல்லை, தாயும் கூட!

உலகில் உள்ள ஒவ்வொரு அற்புதமான அப்பாவுக்கும்" இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்"

ஆனந்த ராம்
20.06.2021

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (20-Jun-21, 1:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 492

சிறந்த கட்டுரைகள்

மேலே