முதுமொழிக் காஞ்சி 98

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
துன்பம் வேண்டுவோன் இன்பந் தண்டான். 8

- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருகாரியத்தில் முயலும் போது உண்டாகிற துன்பத்தை. வெறாமல் விரும்பி ஏற்பவன் பின்பு அதனாலுண்டாகும் இன்பத்தை வெறுத்துக் களைய மாட்டான்!

முன்னே துன்பங்களைப் பட்டு அதனால் இன்பமடைய விரும்புவோன் அத்துன்பங்களின் நிமித்தமாக அவ்வின்பத்தை வேண்டாவென்று களையான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-21, 7:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே