கொம்புப் பாகல் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மருந்துகளின் நற்குணத்தை மாற்றுமஃ தொன்றோ
திருந்தவலி வாதத்தைச் சேர்க்கும் - பொருந்துபித்தங்
கூட்டுமவ பத்தியத்தைக் கொண்டிருக்கும் வன்கரப்பான்
காட்டுங்கொம் புப்பாகற் காய்
- பதார்த்த குண சிந்தாமணி
வாத, பித்தத்தை அதிகரித்து, மருந்தின் தன்மையை முறிக்கும் இயல்பு கொம்பு பாகற்காய்க்கு உண்டு