வைத்தீசா கொல்கொல்நோ யை

வைத்தாய் இடப்பாகத் தில்தைல நாயகியை
வைத்தோம் மனதை உங்கள் பாதத்தில்
வைத்தியா உனையன்றி வேறுவைத் தியமில்லை
வைத்தீசா வதைப்பாய் கொடுநோயை அனல்விழியால்


வைத்தாய் இடப்பாகத் தில்தைல நாயகியை
வைத்தோம் மனதினை உங்கள்மென் பாதத்தில்
வைத்தியா உன்னையல் லால்வைத் தியமில்லை
வைத்தீசா கொல்கொல்நோ யை


வைத்தாய் இடப்பாகத் தில்தைல நாயகியை
வைத்தோம் மனதினை பாதத்தில் - சித்தனே
வைத்தியா உன்னையல் லால்வைத் தியமில்லை
வைத்தீசா கொல்கொல்நோ யை

----முறையே க வி இ வெ நே வெ
சக்கரை வாசனார் பா தூண்டிய பா . நன்றி

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-21, 9:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே