காதல் தூது
வெண்பா
தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த் தூததே -- தாதொத்த
துத்தித்த தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
பெரும் புலவர் காளமேகம் அந்த காலத்தில்
எழுதிய விரசமில்லா தொரு காதல் பாட்டுயிது.
தமிழிலே சவாலாக அமைந்த இந்தப்பாடல் எல்லாக்
கவிஞர்களும் தெரிந்து வைத்திருப்பர்.
தலைவி தலைவனைப்பார்க்க நினைக்கிறாள். தூது யாரை
அனுப்புவது என்று யோசனை செய்கிறாள். தான் வளர்க்குங்
கிளியை அனுப்ப யோசிக்கிறாள். ஆனால் அது சரியாக
சொல்லாதே என்று நினைக்கிறாள். பின்னே தோழியை அனுப்ப
நினைக்கிறாள். ஆனால் அது கால விரையம் ஏற்படுத்தும்.
அதுவும் சரிப்பட்டு வராது. தெய்வத்தை தொழுதால் ஒருவேளை
காதலர் வருவாரா என்று நினைக்கிறாள். ஆனால் அதுவும்
பயன்படாது. இந்த இளம் கன்னி அவளுடையக் காதலனை
உடனடியாகப் பார்த்தால் தான் நிம்மதியாக வாழவாள் அதற்காக
நல்ல இனிதான ஒரு வழியைக் கூறுங்கள் என்று சொல்வதாக
அஸ்மைந்த பாடல்.
பார்த்தவர் படித்தவர் அனைவர்க்கும்
சவால் விடும் பாடல் இது.
.......

